உள்நாடுபிராந்தியம்

கல்வித்துறையில் உச்சம் தொட்ட கல்முனை மஹ்மூத் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு!

இலங்கை அரச சேவைகளில் உயர் பதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச போட்டிப் பரீட்சைகளில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி உச்சம் தொட்ட கல்முனை மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு மஹ்மூத் ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES) ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் விரிவுரையாளர் எம்.ஏ. அஸ்வர், இலங்கை விவசாய சேவை (SLAgS) பாலமுனை விவசாய கல்லூரி உதவி விவசாய பணிப்பாளர் எம்.டி. ஜஹஸ் முஹம்மட், இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) பாத்திமா றுஸ்தா ஆகியோர் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

மஹ்மூத் பெண் மாணவிகள் மாத்திரம் சாதனையாளர்கள் அல்லாமல் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சாதனையாளர்கள் என்பதை இச்சமூகத்திற்கு புடம்போட்டு கட்டியுள்ளார்கள்.

மஹ்மூத் ஆசிரியர்கள், பாடசாலை வளர்ச்சி, உயர்தர பிரிவு, ஒழுக்கம், இணைப்பாட விதானம், தொழில்நுட்பம், முகாமைத்துவ அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அற்பணித்த மேற் ௯றிப்பிடப்பட்ட சிறந்த ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டி கெளரவிப்பதில் பாடசாலை சமூகம் பெருமிதம் கொள்கிறது என கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர், பிரதி, உதவி அதிபர் கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இன்று புதிதாக மேலும் பல பிரதேசங்கள் முடக்கம்