உள்நாடு

கல்விக்கூடங்களுக்கு Asbestos கூரைத்தகடுகளை பாவிக்கத் தடை

(UTV | கொழும்பு) –  பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் (Asbestos ) கூரைத்தகடுகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எஸ்படொஸ் கூரைத்தகடுகளை தடை செய்யும் வேலைத்திட்டத்தை கிரமமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் கூரைத்தகடுகளை பயன்படுத்துவதை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கல்வி அமைச்சு உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

யாருக்கு ஆதரவு? – நாளை இறுதித் தீர்மானம்

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

பல்கலைக்கழக மாணவர்கள் கைது!