நாய்களை கொன்று அதன் இறைச்சிக்கான விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இன்று (01) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் ஏனைய இறைச்சி வகைகளில் கலந்து மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பெரிய நீலாவணை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
