உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் 5 பேரை கடித்த பூனை தலைமறைவாகிய நிலையில் இறந்து கிடந்தது

வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள ஐவரைக் கடித்த நிலையில் இறந்த காணப்பட்ட சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட நகர மண்டப வீதியில் இச்சம்பவம் அண்மையில் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பூனை ஐவரைக் கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளதுடன் நீண்ட தேடுதலின் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த அவ்வதிகாரிகள் குறித்த பூனையை மீட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் மேலதிக பரிசோதனைக்காக பூனையின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேபோன்று அண்மையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் பலரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் பதிவாகி இருந்தது.

இதற்கமைய  குறித்த நபர்களுக்கு கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப பிரதேசத்தில், பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

Related posts

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

editor

சீனாவில் உள்ள 30 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது முடியாத நிலை

திலினி – இசுறு தொடர்ந்தும் விளக்கமறியலில்