உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளி சந்தியில் நேற்று (18) திங்கட்கிழமை இரவு 08.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சாய்ந்தமருது 01 பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 70 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்