உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்

கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் மூன்று வயது பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது
கற்பிட்டி வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் சுமார் 35 வயது மதிக்கத்தக்க திருமணம் முடித்த நபர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது பெண் பிள்ளையை இரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அந்த மூன்று வயது குழந்தை வலியினால் துடித்துள்ளது இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த வாழைத்தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது டன் சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபரின் வீட்டை ஊர் மக்கள் முற்றுகை இட்டதை அடுத்து தப்பி ஓட முயற்சித்துள்ள நிலையில் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளையை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்

Related posts

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான அறிவித்தல்

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துர திலீப இராஜினாமா

editor

அர்ச்சுனா எம்.பியுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்

editor