நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கற்பிட்டி, ஏத்தாளை பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து வெள்ள நீரை வெளியேற்றி தருமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் உள்ள தளவில பிரதான வீதியில் சுமார் 500 மீட்டருக்கும் அதிக தூரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நிக்கிறது இதனை உடனடியாக வெளியேற்றி தருமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயத்தை அறிவித்த போதும் பாராமுகமாக செயற்படுவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
முறையான வடிகான் வசதி இல்லாததால் மழை காலங்களில் இந்த பகுதியில் நீரில் மூழ்குவதாகவும் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதவேளை மின்சார வாரியத்தின் பவுசர் மூலம் நீரை தற்காலிக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நிரந்தர தீர்வை ஒன்றை தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து உள்ளார்கள்.
நிரந்தர தீர்வு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
-கற்பிட்டி நிருபர் சப்ராஸ்
