உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஏத்தாளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை இலங்கை கடற்படையின் வடமேற்கு கடற்படையினர் கட்டளை மேற்கொண்டனர்.

சந்தேகத்தேகத்துக்கிடமான லொறி ஒன்றை சோதனை செய்தபோது பூச்சிகொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தலவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் லொறி மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் டிரான் அலஸுக்கு எதிராக தீர்மானம்!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

editor

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு