உள்நாடுசூடான செய்திகள் 1

கராபிட்டிய வைத்தியசாலையில் 6 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 6 பேர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கராபிட்டிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வெலிசர முகாமைச் சேர்ந்த ஆறு கடற்படையினரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 343 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் அநுர இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி – சஜித்

editor

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை வழங்கும்

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்