கம்போடியா – தாய்லாந்து எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அகிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை முன்னிலைக் கொண்டு புத்தரின் அழியாத போதனைகளால் வழிநடத்தப்படும் ஒரு தேசமாக காணப்படும் இலங்கையானது, இரு நாடுகளும் பிரச்சினைகளை அமைதியாகத் தீர்க்க அவசர இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்துவதாகவும் வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.