அரசியல்உள்நாடு

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (15) கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் தொழில் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் கம்பஹா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்டத்திலுள்ள சுகாதார துறை சார் பிரச்சினைகள், மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பொலிஸார் மற்றும் முப்படையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள், இவ்வருடத்திற்கான மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது‌.

மேலும் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்றங்கள், நிதியொதுக்கீடுகள், புதிய திட்டங்கள் மற்றும் அவை எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் மற்றும் அவற்றை செயற்படுத்தும் போது எழும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பன குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வெளிவிவகார, வெளிநாட்டு சேவை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அனில் ஜயந்த, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் க்ரிஷாந்த அபேசேன உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல் மாகாண பிரதம செயலாளர் தம்மிகா ஜயசிங்க, கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே, மேலதிக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-ரிஹ்மி ஹக்கீம்

Related posts

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

தேவையான திட்டங்களை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor