உள்நாடுபிராந்தியம்

கம்பளை, கண்டி பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.

அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடனும் மோதிய நிலையில் வீடொன்றின் மதில்மீது மோதி நின்றுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கைது செய்வதைத் தடுக்க கோரி சட்டத்தரணி வன்னிநாயக்கவின் மனுவிற்கு திகதியிடப்பட்டது

editor

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த ஹம்தி – தீர்ப்பு வௌியானது

editor