கிசு கிசு

கமல்ஹாசனை நோக்கி கல்,முட்டை வீச்சு?

(UTV|INDIA) அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிய போது கல் மற்றும் முட்டை வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 11ம் திகதி அன்று அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தொிவித்திருந்தாா்.

இந்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்த நிலையில் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு முடித்தார்.

பின்னர் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய போது, மர்ம நபர்கள் சிலர் கல் மற்றும் முட்டையை வீசி எறிந்தனர். உடனே அங்கிருந்த தொண்டர்கள் அந்த நபர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

 

Related posts

இலங்கை மின்சார சபை கடும் நிதி நெருக்கடியில்

மெலிபன் பிஸ்கட்டில் கோஸ்? மாஸ்க்? : 15,000 இற்கு மறைக்கப்பட்ட உண்மை

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது