உள்நாடு

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று அவதானம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று(03) காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இன்று தொடக்கம் பயணிகள் கப்பல்களின் பயணிகளை தரையிறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் சொகுசு கப்பல் ஒன்று இலங்கைக்கு வர இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

60 MPகளை கொல்வதற்கு திட்டம் – அமைச்சர் மனூச

ஹரின், மனுஷவுக்கு SJB இனால் ஒழுக்காற்று நடவடிக்கை

மேல் மாகாணத்திற்கான தடை நள்ளிரவுடன் நீக்கம்