அரசியல்உள்நாடு

கனவுப் பாடசாலை ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – பிரதமர் ஹரிணி

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அந்தப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர், 2030 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

‘கனவுப் பாடசாலை’ ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதனை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது மேலும் தெரிவித்தார்.

இன்று (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக நற்பண்புகள் மற்றும் பச்சாதாபம் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம், மனஅழுத்தம் இன்றி கல்வி கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

editor

ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்.