உலகம்

கனடா துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி

(UTV|கொழும்பு) – கனடாவின் நோவா ஸ்காட்டியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது

கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் பொலிஸாரின் வாகனத்தில் போலியாக பொலிஸ் அதிகாரி போல உடை அணிந்து வந்த குறித்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் பல மணி நேர போராட்டத்திற்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளில் வெற்றி – Oxford பல்கலைக்கழகம்

கொரோனா : உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியது

எலான் மஸ்க்கை ஆலோசகராக வைத்துக் கொள்ள விரும்பும் விவேக் ராமசாமி