உள்நாடு

கந்தகாடு சம்பவம்: முழுமையான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) – நேற்று (06) கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நேற்று (06) பொலன்னறுவை, வெலிகந்த, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50 கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த மோதலில் குறைந்தது ஐந்து கைதிகள் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு/ புனர்வாழ்வுக்குப் பின்னரான ஆதரவுக் கிளையின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியங்கர விதானகமகே தெரிவித்தார்.

புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் பொலிஸாரும் இராணுவத்தினரும் உதவிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

பிரிகேடியர் பிரியங்கர விதானகமகே மேலும் கூறுகையில், குறைந்தது 547 பேரை உள்ளடக்கிய இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்தது, அவர்களில் 299 பேர் தற்போது கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் உள்ளனர்.

தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ஹரிணி – வன்னி எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு

editor

அரசாங்கம் வாய் பேச்சோடு நிற்கின்றனர் – நடவடிக்கைகள் ஏதும் இல்லை – சஜித் பிரேமதாச

editor

கொவிஷீல்ட் தடுப்பூசி நேற்று 21,715 பேருக்கு செலுத்தப்பட்டது