வகைப்படுத்தப்படாத

கத்திக்குத்து தாக்குதலில் பெண் குழந்தை உள்பட இருவர் உயிரிழப்பு

(UTV|JAPAN) ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்த நிலையில் அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இந்த தாக்குதலில் பெண் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பூங்காவில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related posts

கொழும்பு-கல்கிஸ்ஸ மாநகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

සමන් දිසානායක CID අත්අඩංගුවට.