உள்நாடு

கண்டி, நுவரெலியாவில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புர, மினிப்பே மற்றும் மெததும்புர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் மத்துட்ட, நில்தண்டாஹின்ன, வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருக்கவும் (Amber) பின்வரும் பகுதிகளுக்கு 2ம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்:
பதுளை
சொரணத்தோட்டை
ஹாலி எல
பசறை
லுணுகலை
மீகஹகிவுல
கந்தகெட்டிய

கண்டி மாவட்டம்:
கங்கவட்ட கோரளை
பாதஹேவாஹெட்ட
அக்குரணை
யட்டிநுவர
தும்பனே
ஹாரிஸ்பத்துவ
பூஜாப்பிட்டிய
பஸ்பாகே கோரளை
ஹதரலியத்த
குண்டசாலை
உடுநுவர
தெல்தோட்டை
பாததும்புர
பன்வில
உடபலாத
கங்க இஹல கோரளை

குருநாகல் மாவட்டம்:
ரிதிகம

மாத்தளை மாவட்டம்:
நாவுல
இரத்தோட்டை
அம்பகங்க கோரளய
உக்குவளை
வில்கமுவ
யட்டவத்த
மாத்தளை
பல்லேபொல
லக்கல பல்லேகம

நுவரெலியா மாவட்டம்:
நுவரெலியா

Related posts

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க முயற்சி!

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

editor

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்