கண்டி மாவட்ட செயலகத்தை குறிவைத்து இரண்டு குண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (14) பதுளை மாவட்ட செயலகத்துக்கு மற்றொரு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பகுதியில் முன்னர் பதிவான அச்சுறுத்தல்களைப் போலவே இந்த அச்சுறுத்தலும் மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதுளை மாவட்ட செயலகத்தில் உள்ள ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தற்போது தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், வளாகத்தை சோதனை செய்ய விசேட பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
