உள்நாடு

கண்டியில் இடிந்த கட்டிடத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு

(UTV | கொழும்பு) – கண்டி – புவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அவற்றின் தரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் கொங்கிறீட் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

பரிசோதனை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் சில தினங்களில் மத்திய மாகாண ஆளுநருக்கும் மாவட்ட செயலாளருக்கும் வழங்கப்படவுள்ளது.

குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போது, உரிய நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்ட அனுமதியை மீறியே கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமையினால் அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசமாக கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர

editor

அஸ்வெசும நலன்புரி சபையின்  தலைவர் இராஜினாமா!

editor