உள்நாடு

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம் – மாம்புரியில் சோகம்

கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் இன்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில்
கொங்ரீட் இடுவதற்கு தயார் செய்துகொண்டிருந்த ஊழியர்கள் பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார்.

எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

IDH இல் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

பத்துளுஓயாவில் வீழ்ந்தது எரிபொருள் பவுஸர்