உள்நாடு

கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானமொன்று இன்று (21) காலை விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த தருணத்தில் இரண்டு பயிற்சி விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியது.

ஜெட் விமானம் ஒரு தென்னை தோட்டத்தில் விழுந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.

Related posts

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய அநுராதபுர நகரம்

editor

மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

எரிபொருள் விநியோகம்; மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை