உள்நாடு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பெண்கள் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார உபகரணங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன், வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதை வழியாக வெளியேற முயன்ற மூன்று இலங்கை பெண்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) இரவு அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 46 வயது தாய் ஒருவரும், அவரது 18 வயது மகளும், வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 56 வயது வர்த்தகப் பெண்ணும் அடங்குவர்.

இவர்கள் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தில் இருந்து வாங்கி, காற்றுச்சீரமைப்பு மற்றும் மின்சார உணவு தயாரிப்பு உபகரணங்கள் 7 இல் நுணுக்கமாக மறைத்து, இந்தியாவின் சென்னை நகருக்கு வந்து, பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த மூன்று பெண்களும் இதற்கு முன்பு பல தடவைகள் இவ்வாறு மின்சார உபகரணங்களை எடுத்து வந்துள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன், அவற்றை எடுத்து வந்த மூன்று பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

MV X-Press Pearl கப்பலின் VDR சாதனம் இரசாயன பரிசோதனைக்கு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து!