உள்நாடு

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலத்த காயம்

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 51 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்வத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை – சஜித் சபாநாயகரிடம் கேள்வி | வீடியோ

editor

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor