உள்நாடு

கட்டாயப் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம் – நீதி அமைச்சு

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கு பிரேத பரிசோதனைகள் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

25.04.2025 திகதியிட்ட 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் மரணங்களும் கட்டாயமாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு சுற்று நிருபம் அறிவித்திருந்தது. .

சிறுவர் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு இது அத்தியாவசியமானது எனவும் காரணங்களைக் கண்டறிவதன் மூலம் இறப்புக்களைக் குறைக்க முடியும் எனவும் நீதி அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக் காட்டியிருந்தது.

நிபுணத்துவ குழுவொன்றின் அறிக்கையை பெறும் வரை இதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

அம்பாறை விபத்தில் மூவர் பலி : ஐவர் படுகாயம்

வடமாகாணஆளுநரை சந்தித்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்!

இலங்கை மாணவர்களுக்கு விசேட விமான சேவை