சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்கள் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட குழுக்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் அனைத்து கட்சிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நாளை காலை  10.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

(VIDEO) “பஷில்-ரணிலுக்கு வந்த புதிய சிக்கல்” கனடாவில் அநுர

வெடிப்புச் சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு