உள்நாடுபிராந்தியம்

கடைக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சின்னையா பிரேமந் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நேற்று (21) மதியம் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தார்.

இதன்போது கடைக்கு முன்னாலே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

-கஜிந்தன்

Related posts

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போருக்கான அறிவித்தல்