அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (25) காலை பதவியேற்றதன் பின்னரே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

ஒக்டோபர் மாதத்திற்குள் வரிசையை நிறைவு செய்ய முடியும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வரிசையை நீக்குவதற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்த விஜித ஹேரத், அந்த முன்மொழிவுகள் கிடைத்த பின்னர் மாற்று வழிகளுக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தம்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது

editor