மூதூரில் இருந்து (29) திங்கட்கிழமை கடலுக்குச் சென்ற இயந்திரப் படகு மீண்டும் கரை திரும்பியபோது விபத்துக்குள்ளானது.
இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் காணாமல் போயிருந்தார்.
காணாமல் போனவரைத் தேடும் பணி நேற்று (01) புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்காக 50-க்கு மேற்பட்ட பொதுமக்களின் இயந்திரப் படகுகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளன அத்துடன் சம்பூர் போலீஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-முஹம்மது ஜிப்ரான்