உள்நாடு

கடலில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல்: சாரதிக்கு தடை! கப்பலை பொறுபேற்ற இலங்கை அரசு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக  கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் குறித்த சம்பவத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் பழுதுபார்ப்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள நிலையில், எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இது தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கப்பலில் இருந்து ஹைட்ராலிக் எண்ணெய் கசிந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கப்பலுக்கு சொந்தமான நிறுவனமும் தவறை ஏற்றுக் கொண்டு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த இந்திய கப்பலின் கெப்டன்  நாட்டை விட்டு வௌியேறுவதை தடுக்கும் வகையில் அவருக்கு பயணத்தடை விதிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு துறைமுக பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 763 : 08 [COVID 19 UPDATE]

ஜனாதிபதி அநுர இன்று வியட்நாம் பயணம்

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு