வகைப்படுத்தப்படாத

கடற்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் விபத்துள்ளானதில் 16 பேர் உயரிழந்துள்ளனர்.

கடற்படை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கெப்டன் சாரஹ் பர்ன் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

ஆறு ஒன்றின் கடற்கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.

விமானம் விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அருகில் உள்ள மக்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

விமானம் சுக்கு நூறாக சிதறி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிபத்தில், 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேடுதல் பணிகள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

[ot-video][/ot-video]

Related posts

Drug peddler arrested in Tangalle

100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

பொதுஜன பெரமுனவுடன் இணைந்ததா சுதந்திர கூட்டமைப்பு?