உள்நாடுவணிகம்

‘கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு’

(UTV | கொழும்பு) – நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Shenhong தெரிவித்துள்ளார்.

தூதுவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் நேற்று (07) உத்தியோகபூர்வமாக தூதுவரைச் சந்தித்த போதே சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தி இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தூதுவர் தெரிவித்ததாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கை தனித்து விடப்பட மாட்டாது என்றும், நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் சீனத் தூதுவர் உறுதியளித்ததாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்