உள்நாடுபிராந்தியம்

கடனை வசூலிக்கச் சென்ற 23 வயதான இளைஞர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்று (05) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் என தெரியவந்துள்ளது.

நிதி தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சமூகத்தின் நலன்கருதி மு.காவுடன் இணைந்து போட்டியிட்டு ஏமாற்றப்பட்டுள்ளோம் – ரிஷாட் பதியுதீன்

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

இன்று முதல் அனுமதி