உள்நாடு

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 36,708 பேருக்கு டெங்கு பாதிப்பு

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 2749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுளளனர்.

அத்துடன் இவ் வருடத்தில் இதுவரை 19 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு மற்றும் சிக்கன்குனியா இரண்டும் தற்போது அதிகம் பரவி வருவதால் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் அவர்கள் பெரசிடமோல் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒருவருக்கு காய்ச்சல் இருப்பின் அவர் டெங்கு வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தால் பிற வலி நிவாரணிகளை உட்கொள்வது உட்புற இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புடன் இருக்கும்படியாகவும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

editor

கல்முனை மாநகர சபையில் Online Payment System அங்குரார்ப்பணம்

ஆறு பக்க அறிக்கையை முன்வைத்துள்ள மஹிந்தானந்த