அரசியல்உள்நாடு

கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம் – ரிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், இன்று காலை (14) பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்தார்.

மன்னார், தாராபுரம், அல் மினா மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில், அவர் தனது குடும்பத்தினர் சகிதம் வாக்குச் செலுத்தினார்.

இதன்போது, தாராபுரம் பிரதேச இளைஞர்களினால் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

அதன் பிற்பாடு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தலைவர் ரிஷாட் பதியுதீன்,

“வன்னி மாவட்ட மக்களுக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம்.

அந்தவகையில், மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும், மக்கள் நலனுக்காகவும் நாம் ஆற்றிய பணிக்கு, மக்கள் இந்தத் தேர்தலிலே எமக்கு அதிகமான வாக்குகளை வழங்கி, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்திக்கு பெற்றுத்தருவார்கள் என நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-ஊடகப்பிரிவு

Related posts

பொய்களுக்கு முற்றுப்புள்ளி – சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது – சஜித் பிரேமதாச

editor

COVAX தடுப்பூசி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

6 குழந்தைகளில் உயிர் பிரிந்த ஒரு குழந்தை!