உள்நாடு

கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக தீக்கிரை

(UTV | கொழும்பு) – கொழும்பு – பாலத்துறை – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்றிரவு 12.30 அளவில் தீ பரவியதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் பாரவூர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் விஜித ஹேரத்

editor

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட நற்சான்று பத்திரம்!

நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை