உள்நாடு

கச்சதீவு புனித திருவிழா – கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட நடவடிக்கை

(UTV|கொழும்பு)- கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 7,000 பக்தர்களும் இந்த புனித தேவாலய திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை ஊடக போச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் வைத்து இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் வசதி கருதி போக்குவரத்து தண்ணீர் உள்ளிட்ட சகல அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கச்சதீவு புனித தேவாலய ஆராதனைகள் தொடர்பில் வடக்கு செயலகம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கடற்படை கொண்டுள்ள கப்பல் மற்றும் படகுகளை இதற்காக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொடர்பாகவும் இதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

Related posts

இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றுக்கு அமைச்சர்கள் கட்டாயம்

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு