உள்நாடு

கஃபூர் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து கடற்படை வீரர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பரோன் ஜயதிலக மாவத்தையில் பழுதுபார்க்கப்பட்டு வரும் கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து அவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை பொறியாளர்களால் இக்கட்டிடம் புதுப்பிக்கப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த கடற்படை வீரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    

Related posts

பீரிஸ் உடன் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…!

வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும் – தர்மரத்ன தேரர்.