கேளிக்கை

ஓவியா மீது பொலிஸில் புகார்!

(UTV|INDIA) நடிகை ஓவியா நடித்துள்ள 90ml படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. படம் பெண்களை தவறான பாதைக்கு இழுத்து செல்லும் விதத்தில் இருப்பதாகவும், கலாச்சார சீரழிவு என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் ‘90ML’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்தவர்கள் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

 

 

 

Related posts

அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா?

4 மணிநேரம் மேக்கப், 120 உடை-கீர்த்தி

இடிந்து போகும் ஆள் நானில்லை…