கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை – 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் இருள் நிறைந்து காணப்படுகிறது.
மின் விளக்குகள் பொருத்தப்படாமல் மிக நீண்ட காலமாக அந்த இடம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
இதனால் அந்த பாலத்தை குறுக்கறுத்துச் செல்லும் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என அனைவரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
குறித்த பாலம் இருளில் இருப்பதால் அங்கு சமூக சீர்கேடு இடம்பெற வாய்ப்பும் உள்ளதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பள்ளிவாசலுக்கு செல்வோரும் ஏனை தேவைகளுக்காக அவ்விடத்தால் செல்வோரும் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் துரித நடவடிக்கையினை மேற்கொண்டு குறித்த இடத்தில் மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என பிரதேச வாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்