உள்நாடுவிசேட செய்திகள்

ஓட்டமாவடி, மாஞ்சோலை நபர் குவைத்தில் மரணம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 60 வயதுடைய அலியார் ஹயாத்து முகம்மட் என்பவர் (18) செவ்வாய்க்கிழமை குவைத் நாட்டில் வைத்து மரணமடைந்துள்ளார்.

தொழில் நிமித்தம் இலங்கையில் இருந்து குவைத் – உம்முல் ஹைமா எனும் பகுதியில் வேலைக்குச் சென்ற நபரே மரணமடைந்துள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக குவைத் நாட்டிலிருந்து தகவல் கிடைத்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மரணமடைந்த நபரின் ஜனாஸாவை குவைத் நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குடும்ப உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி

editor

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

editor