உலகம்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம் – ஹொங்கொங்கில் சம்பவம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது.

விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய வாகனத்தில் இருந்த இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும், விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஓடுபாதையை மூட விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

காசா மீது இஸ்ரேலியப் படை குண்டு மழை – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஹமாஸ் தலைவர் கெய்ரோவிற்கு விரைவு

editor

இறைகருணை, நிம்மதி, பாதுகாப்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன் – இலங்கைக்கான சவூதி தூதுவரின் ரமழான் செய்தி

editor

போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது- வட கொரியா