உள்நாடு

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்

(UTV | கொழும்பு) – ஆட்கள் பதிவுத் திணைக்களம் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை, தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவத்தில் வழங்கத் தொடங்கியுள்ளது.

2022 ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் உள்ள குழந்தையுடன் தொடர்புடைய எண் 15 வயதை எட்டும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வேலைத்திட்டம் 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மொழிமாற்றங்களைச் செயல்படுத்தும் வகையில் சிங்களம்-தமிழ் அல்லது ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரு மொழிகளில் சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

Related posts

பாணந்துறையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது

1,350 ரூபா பெற்றுக் கொடுத்ததே பெரிய வெற்றி – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor

கொவிட் தடுப்பூசிக்கு அரசு 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்