கேளிக்கை

ஒஸ்கார் பட்டியலில் ‘சூரரைப் போற்று’

(UTV |  இந்தியா) – கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சூரரைப் போற்று’.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களும் ஒஸ்கார் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அந்த வரிசையில், பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.

இதையடுத்து இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஒஸ்கார் மேடையில் அறிவிப்பார்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

2018 இல் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்

சன்னி லியோனுக்கு மெழுகு சிலை

மக்களை சிரிக்க வைத்த நடிகர் தவக்கலைக்கு சினிமாவே எமனான கதை