உள்நாடு

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|பதுளை) திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று (14) கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது மாணவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் ஏற்பட தொடங்கியதன் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 மாணவர்களும் 3 மாணவிகளும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை

100 மில்லியன் ரூபா செலவு செய்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ரணில்!

editor

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்