விளையாட்டு

ஒலிம்பிக் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளமையினால், குறித்த கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.

மூன்றாம் தரப்பு மூலமாக ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கணக்குகள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த  இரண்டு மாதங்களில் பேஸ்புக் மற்றும் தேசிய கால்பந்து லீக் (NFL) அணிகளின் பல கணக்குகள் உட்பட இணையதளத்தில் பல உயர் கணக்குகளும் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வலையில் மொயீன்

பாகிஸ்தான் மகளிர் அணி 69 ஓட்டங்களால் வெற்றி

‘IPL 2021’ போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்