உள்நாடு

ஒரு தொகை மஞ்சளுடன் நால்வர் கைது

(UTV|மன்னார்) – சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 807 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் நுரைச்சோலை கடற்கரைகளின் ஊடாக சட்டவிரோதமாக குறித்த உலர்ந்த மஞ்சள் தொகையை நாட்டிற்கு கொண்டு வர முற்பட்டபோது கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் தொகை, இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சந்தேகநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சின்னபாடு மற்றும் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

Related posts

​கொரோனாவிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்தனர்

நாளை 24 மணிநேர நீர் விநியோகம் தடை

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 271ஆக உயர்வு