உள்நாடு

ஒருநாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, இன்று (25) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு, முன்கூட்டியே அதற்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று தொடர்பான சுகாதார வழிகாட்டிக்கு அமைவாக ஒரு நாள் சேவையை, பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திலும், காலி – தென் மாகாண காரியாலயத்திலும் பொதுமக்கள் இந்த ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்கள் , தமது விண்ணப்பப் படிவத்தை தமது கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை தொடர்பான பிரிவில் ஒப்படைத்து, அதற்கான திகதி மற்றும் நேரம் என்பவற்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.

Related posts

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

editor

ஐசிசி 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் – இலங்கைக்கு முதலாவது தோல்வி

ஜோசப் ஸ்டாலின் கைது