உலகம்உள்நாடு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் 20 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்ற உள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று மற்றும் 34 இன் கீழ் ஒன்று முதலான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்ட, 40 இன்கீழ் ஒன்று என்ற தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Related posts

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,633 பேர் கைது

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!